விஜயகாந்த் ANI
தற்போதைய செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை: ஊழியர்களை விமானத்தில் அழைத்து வந்த தீவிர ரசிகர்

இந்த செயலுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

யோகேஷ் குமார்

டிசம்பர் 28 அன்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவரது நினைவிடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த விஜயகாந்தின் தீவிர ரசிகரான மாயன் தன்னிடம் பணியாற்றும் 80 தொழிலாளர்களை சொந்த செலவில் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்துள்ளார். விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளார் மாயன். இந்த செயலுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.