பிரக்ஞானந்தா, வைஷாலி படம்: எக்ஸ் தளம் | செஸ்பேஸ் இந்தியா
தற்போதைய செய்திகள்

முகமது ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது

சுவாமிநாதன்

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழ்நாட்டு செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) அறிவித்தது. உலகக் கோப்பையில், 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி அர்ஜுனா விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இவர்கள் உள்பட மொத்தம் 26 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.பி. ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருதும், கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் பிரிவுக்கான த்யான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா, துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனையாளர் பிரிவுக்கான துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனையாளர் பிரிவுக்கான த்யான் சந்த் விருதுகளைப் பெறும் சாதனையாளர்கள் பட்டியலையும் மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா விருது:

சிராக் சந்திரசேகர் ஷெட்டி - பேட்மிண்டன்

ராங்கி ரெட்டி சாத்விக் சாய் ராஜ் - பேட்மிண்டன்

அர்ஜுனா விருது:

ஓஜாஸ் பிரவீன் தியோடலே - வில்வித்தை

அதிதி கோபிசந்த் சுவாமி - வில்வித்தை

ஸ்ரீஷங்கர் எம் - தடகளம்

பருல் சௌதரி - தடகளம்

முஹமீத் ஹுசாமுதீன் - குத்துச்சண்டை

வைஷாலி - செஸ்

முகமது ஷமி - கிரிக்கெட்

அனுஷ் அகர்வாலா - குதிரையேற்றம்

திவ்யகிரிதி சிங் - குதிரையேற்றம்

தீக்ஷா தாகர் - கோல்ஃப்

கிரிஷன் பஹதூர் பதக் - ஹாக்கி

புக்ரம்பம் சுஷிலா சானு - ஹாக்கி

பவன் குமார் - கபடி

ரிது நெகி - கபடி

நஸ்ரின் - கோ-கோ

பிங்கி - லான் பௌல்ஸ்

ஐஸ்வர்ய் பிரதாப் சிங் தோமர் - துப்பாக்கிச் சுடுதல்

ஈஷா சிங் - துப்பாக்கிச் சுடுதல்

ஹரீந்தர் பால் சிங் சாந்து - ஸ்குவாஷ்

அயிகா முகர்ஜி - டேபிள் டென்னிஸ்

சுனில் குமார் - மல்யுத்தம்

அன்டிம் - மல்யுத்தம்

நவோரம் ரோஷிபினா தேவி - வுஷு

ஷீடல் தேவி - பாரா வில்வித்தை

இல்லூரி அஜய் குமார் ரெட்டி - பார்வையற்றோருக்கான கிரிக்கெட்

பிரச்சி யாதவ் - பாரா கனோயிங்

துரோணாச்சார்யா விருது:

லலித் குமார் - மல்யுத்தம்

ஆர்.பி. ரமேஷ் - செஸ்

மஹாவீர் பிரசாத் சைனி - பாரா தடகளம்

ஷிவேந்திர சிங் - ஹாக்கி

கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கார் - மல்லாகம்ப்

வாழ்நாள் சாதனையாளர் பிரிவுக்கான துரோணாச்சார்யா விருது:

ஜஸ்கிராத் சிங் கிரேவல் - கோல்ஃப்

பாஸ்கரன் - கபடி

ஜெயந்த் கமார் புஷிலால் - டேபிள் டென்னிஸ்

வாழ்நாள் சாதனையாளர் பிரிவுக்கான த்யான் சந்த் விருது:

மஞ்சுஷா கன்வர் - பேட்மிண்டன்

வினீத் குமார் சர்மா - ஹாக்கி

கவிதா செல்வராஜ் - கபடி

ஜனவரி 9-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 11 மணியளவில் நடைபெறும் விழாவில் இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கி கௌரவிப்பார்.