‘மாரீசன்’ @super good films
தற்போதைய செய்திகள்

ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கவுள்ள ‘மாரீசன்’

மலையாளத் திரைப்பட இயக்குநரான சுதீஷ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்

யோகேஷ் குமார்

ஃபஹத் பாசிலும், வடிவேலும் சேர்ந்து நடிக்கவுள்ள படத்திற்கு ‘மாரீசன்’ என தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஃபஹத் பாசிலும், வடிவேலும் சேர்ந்து நடிக்கவுள்ளதாகப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை ஆர்.பி. சௌத்திரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தங்களின் 98வது தயாரிப்பில் ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு போன்ற பலர் நடிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இப்படத்திற்கு ‘மாரீசன்’ என தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆறுமனமே, வில்லாளி வீரன் போன்ற ஒரு சில படங்களை இயக்கிய மலையாளத் திரைப்பட இயக்குநரான சுதீஷ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - கலைச்செல்வன் சிவாஜி (போர் தொழில் படத்தின் ஒளிப்பதிவாளர்).