உமேஷ் யாதவ் ANI
தற்போதைய செய்திகள்

ரஞ்சி கோப்பையில் அசத்தி வரும் உமேஷ் யாதவ்

விதர்பா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் 3 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

யோகேஷ் குமார்

ரஞ்சி கோப்பையில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் 3 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இதன் பிறகு தற்போது ரஞ்சி கோப்பையில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் இதுவரை 3 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2024 ரஞ்சி கோப்பையில் உமேஷ் யாதவ்

15-3-47-2

22-3-73-3

17-2-42-3

16-3-56-4

12-2-48-2

11-0-43-4

விதர்பா அணி 4 ஆட்டங்களில் மூன்று வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் 57 டெஸ்டுகளில் 170 விக்கெட்டுகளும், 75 ஒருநாள் ஆட்டங்களில் 106 விக்கெட்டுகளும், 9 டி20 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.