ANI
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் : எளிதில் தீர்க்க செப். 13-ல் லோக் அதாலத் | Traffic Challans | Lok Adalat |

விதிமீறல் அபாரத தொகையில் முழுமையாகவோ 50% தள்ளுபடியோ பெற வாய்ப்பு...

கிழக்கு நியூஸ்

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 13 ல் நடைபெறும் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையில் தள்ளுபடி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனுக்குடன் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் செப்டம்பர் 13-ல் நாடு முழுவதும் நடைபெறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் மீதுள்ள போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையில் முழுமையாகவோ, 50% தள்ளுபடியோ பெற்றுக் கொள்ளலாம். இதில் சிறிய முதல் பெரிய அபாரதங்கள் குறைந்த செலவி தீர்த்து வைக்கவோ ரத்து செய்து கொள்ளவோ வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், கடுமையான போக்குவரத்து மீறல்கள் இதன்மூலம் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ரெட் சிக்னலை மீறுதல், தவறாக வழங்கப்பட்ட சலான், நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்துதல், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன தகுதிச் சான்றிதழ் வைத்திருக்காதது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல்களைப் புறக்கணித்தல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவை தள்ளுபடி பெறத் தகுதியான விதி மீறல்களாகச் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், விபத்து வழக்குகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட மரணம், சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல், அங்கீகரிக்கப்படாத ரேஸ், குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், நீதிமன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்கள், பிற மாநிலங்களில் வழங்கப்படும் அபராத சலான்கள் போன்றவை லோக் அதாலத்தில் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் அதாலத்தில் பங்கேற்க, National Legal Services Authority-ன் (NALSA) இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன்களை பெற வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரம் மற்றும் இடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வருமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Lok Adalat | Traffic Challans | Traffic Fines| Minor Violations |