போனி கபூர்  ANI
தற்போதைய செய்திகள்

சூர்யாவுடன் நடிக்கும் ஜான்வி கபூர்: உறுதிசெய்த போனி கபூர்

சூர்யா நடிக்கும் ஹிந்தி படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

யோகேஷ் குமார்

சூர்யா நடிக்கும் ஹிந்தி படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மகாபாரதத்தை மையப்படுத்தி ‘கர்ணா’ படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். ஜான்வி கபூர் இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அதனை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து யூடியூப் நேர்காணலில் போனி கபூர் பேசியதாவது: “ஜான்வி கபூர் இரண்டு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கிறார். எனது மனைவி (ஶ்ரீதேவி) பல மொழி படங்களில் நடித்தார். அது போல எனது மகளும் பல மொழி படங்களில் நடிக்கிறார்” என்றார்.

ஏற்கெனவே சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ‘கர்ணா’ படத்தின் வேலைகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.