தற்போதைய செய்திகள்

கமல் படத்துக்காக ஆளே மாறியிருக்கும் சிவகார்த்திகேயன்! (வீடியோ)

முதல் பார்வை டீஸரில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சிவகார்த்திகேயனை பார்க்க முடிகிறது.

யோகேஷ் குமார்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் டைட்டில் டீசர் பிப்.16 அன்று வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2017-ல் வெளியான ‘ரங்கூன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கிறார்கள். இசை - ஜி.வி பிரகாஷ். கடந்த மே மாதம் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் பிப்.16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஒரு காணொளியும் வெளியாகியுள்ளது. இப்படத்துக்காக, கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தன் உடலை சிவகார்த்திகேயன் மெருகேற்றும் காட்சிகளை அக்காணொளியில் காணமுடிகிறது. இந்தக் காணொளி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்றே கூறலாம்.