சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷாபாஸ் நதீம்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷாபாஸ் நதீம் ANI
தற்போதைய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷாபாஸ் நதீம்

யோகேஷ் குமார்

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஷாபாஸ் நதீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

உலகமுழுக்க நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் இனி பங்கேற்பேன் எனவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

34 வயதான ஷாபாஸ் நதீம் இந்திய அணிக்காக 2019-ல் ஒரு டெஸ்ட், 2021-ல் ஒரு டெஸ்ட் என இரண்டு டெஸ்டில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனது 15 வயதில் தொடங்கி 20 வருடமாக ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் ஷாபாஸ் நதீம் முதல்தர கிரிக்கெட்டில் 140 ஆட்டங்களில் விளையாடி 542 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2015-16 மற்றும் 2016-17 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

ஐபிஎல் போட்டிகளில் 72 ஆட்டங்களில் பங்கேற்று 48 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், ஐபிஎல் 2022-ல் லக்னெள அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.

2011-2018 ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காகவும், 2019-2021 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.