தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அரை சதம் விளாசினார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 116 ரன்களுக்குச் சுருண்டது. அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்திய அணி இன்னிங்ஸில் தொடக்க வீரரான ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன்களில் ஆட்டமிழக்க அறிமுக வீரர் சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர்களான கேஎல் ராகுல், உத்தப்பா, மனிஷ் பாண்டே, நவ்ஜோத் சிங் சித்து போன்ற பலருடன் இச்சாதனையை பகிர்ந்துள்ளார் சாய் சுதர்சன்.
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக அசத்திய சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப அணியில் அவருக்கு இடமும் கிடைத்தது. இப்போது கிடைத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் சாய் சுதர்சன்.