Udhayanidhi stalin ANI
தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் தந்தையாக முதல்வர் செயல்படுகிறார்: உதயநிதி ஸ்டாலின்

ரூ. 1,191 கோடியிலான குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

யோகேஷ் குமார்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ரூ. 1,191 கோடியிலான குடிநீர் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தின் தந்தையாக முதலமைச்சர் செயல்படுகிறார்” என இவ்விழாவில் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:

“இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராமங்களிலும் சீரான குடிநீர் வழங்குவதை நமது திமுக அரசு உறுதிப்படுத்தி வருகின்றது. இன்று அனைவரும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருக்கிறோம் என்றால் அதற்குக் கலைஞர் அவர்களே காரணம். தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களும் வளர்ந்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாட்டின் சிறந்த முதல்வர் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தந்தையாக முதலமைச்சர் செயல்படுகிறார்” என்றார்.