ரச்சித்தா rachitha_mahalakshmi_official
தற்போதைய செய்திகள்

‘எக்ஸ்டீரிம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரச்சித்தா

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சித்தா ‘எக்ஸ்டீரிம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

யோகேஷ் குமார்

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சித்தா ‘எக்ஸ்டீரிம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சித்தா. இவர் 2015-ல் உப்புக் கருவாடு படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில் ‘எக்ஸ்டீரிம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ரச்சித்தா. இப்படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்ட ரச்சித்தா பேசியதாவது: “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகவே நான் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலே நமக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துவிடாது. பிக்பாஸ் நம்முடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடம். தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவே எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது” என்றார்.