பேட் கம்மின்ஸ்  @SunRisers
தற்போதைய செய்திகள்

பேட் கம்மின்ஸை கேப்டனாக அறிவித்த சன்ரைசர்ஸ் அணி

ஏலத்தில் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு தேர்வு செய்தது ஹைதராபாத் அணி.

யோகேஷ் குமார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார்.

ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. கடந்த வருடம் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியத்துவம் அளித்து ஐபிஎல் போட்டியிலிருந்து கம்மின்ஸ் விலகினார். இந்நிலையில் இந்த ஆண்டு கேப்டனாக களமிறங்குகிறார். 2023-ல் இவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

2020 முதல் 2022 வரை கேகேஆர் அணியில் விளையாடிய கம்மின்ஸ் முதல் முறையாக ஐபிஎல்-லில் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேல் ஸ்டெயின் விலகினார், புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் தேர்வு செய்யப்பட்டார்.