தற்போதைய செய்திகள்

உலகளவில் கரோனா பாதிப்பு 52% அதிகரிப்பு

சுவாமிநாதன்

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலகட்டத்தில் மட்டும் புதிதாக 8,50,000 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் புதிதாக 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். முந்தைய 28 நாள்கள் தரவுகளோடு ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1,18,000. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,600. இவை முறையே 23 சதவிகிதம் மற்றும் 51 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதிகளவில் பரவக்கூடிய திறன் கொண்டுள்ளதால் ஜெஎன்.1 வகை கரோனா தனி வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கரோனாவால் ஏற்படும் அபாயம் குறைவானதாகவே கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வகை கரோனா ஏற்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளிலிருந்து தற்போதைய தடுப்பூசிகள் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.