பறக்கும் ரயில்
பறக்கும் ரயில்  ANI
தற்போதைய செய்திகள்

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்: சரிந்த மேம்பாலம்

யோகேஷ் குமார்

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், சோதனை ஓட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அங்கு மேம்பாலம் சரிந்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ரயில் போக்குவரத்துச் சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாள்களாகப் பணிகள் நடைபெற்று வந்த வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலைக்குச் செல்லக்கூடிய பறக்கும் ரயில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இரு தூண்களுக்கு இடையே 40 மீட்டர் நீளம், 120 அடி அகல பால அமைப்பை இணைக்கும் போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தைச் சுற்றி தடுப்பு போடப்பட்டு, மக்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.