மனோஜ் திவாரி
மனோஜ் திவாரி ANI
தற்போதைய செய்திகள்

தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மனோஜ் திவாரி

யோகேஷ் குமார்

பெங்கால் அணியின் கேப்டனான மனோஜ் திவாரி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர் 2008 முதல் 2015 வரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் ஆட்டங்களிலும், மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடினார். ஒருநாள் ஆட்டங்களில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 287 ரன்களை அடித்தார்.

2004 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் மனோஜ் திவாரி 148 ஆட்டங்களில் பங்கேற்று 30 சதம், 45 அரைசதம் உட்பட 10195 ரன்களை குவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பையில் பிகாருக்கு எதிரான ஆட்டத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மனோஜ் திவாரி. தனது கடைசி இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஆட்டம் முடிந்தபின் தனது ஓய்வு குறித்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

ஏற்கெனவே கடந்த ஆண்டு மனோஜ் திவாரி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இருந்தும் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாகவும், 2023-24 ரஞ்சி கோப்பையில் பங்கேற்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதனிடையே, 2021-ல் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மனோஜ் திவாரி இணைந்தார்.