ரூ. 100 கோடி வசூல் செய்த ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ @ __chidambaram__
தற்போதைய செய்திகள்

ரூ. 100 கோடி வசூல் செய்த ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’

ரூ. 100 கோடி வசூல் செய்த 4-வது மலையாள படம் எனும் பெருமையை பெற்றது.

யோகேஷ் குமார்

பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ரூ. 100 கோடி வசூல் செய்த 4-வது மலையாள படம் எனும் பெருமையை பெற்றது இப்படம். இதற்கு முன்பு 2016-ல் வெளியான ‘புலி முருகன்’, 2019-ல் ‘லுசிஃபர்’, 2023-ல் ‘2018’ ஆகிய படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ இப்பட்டியலில் இணைந்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் சிதம்பரம் இயக்கிய படம் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’.

படம் வெளியான முதல் நாளிலிருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இதைத் தொடர்ந்து இப்படம் வெளியான இரண்டே வாரங்களில் வசூலில் சாதனை செய்துள்ளது.