வில்லியம்சன் @kane_s_w
தற்போதைய செய்திகள்

வில்லியம்சன் - சாரா காதல் ஜோடிக்கு 3-வது குழந்தை!

வில்லியம்சனுக்கு ஏற்கெனவே 2019-ல் ஒரு பெண் குழந்தையும், 2022-ல் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தன.

யோகேஷ் குமார்

பிரபல கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனுக்கு 3-வதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை இன்ஸ்டகிராமில் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “இந்த அழகான உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்” என்றார். வில்லியம்சனுக்கு ஏற்கெனவே 2019-ல் ஒரு பெண் குழந்தையும், 2022-ல் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தன.

2015-ல் சிகிச்சையின்போது சந்தித்த செவிலியர் சாரா ரஹீமைக் காதலித்து வருகிறார் வில்லியம்சன். இன்றுவரை இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை.

தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இருந்து வில்லியம்சன் விலகினார்.

வில்லியம்சனுக்கு குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வார்னர் உட்பட பல கிரிக்கெட் நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.