அம்பேத்கர்  ANI
தற்போதைய செய்திகள்

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை: விஜயவாடாவில் நாளை திறப்பு

206 அடி உயரம் உள்ள உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் திறக்கப்படவுள்ளது.

யோகேஷ் குமார்

206 அடி உயரம் உள்ள உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் திறக்கப்படவுள்ளது.

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாளை திறக்கப்படவுள்ளது. இதனை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கவுள்ளார். 125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. சிலை அமைக்கப்பட்டுள்ள அந்த பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது.

சமூக நீதியின் மிகப் பெரிய சிற்பம் இச்சிலை என்றும் இவ்விழாவில் மக்கள் தாமாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என இச்சிலை திறப்பு குறித்து ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.