ஜாக் லீச் ANI
தற்போதைய செய்திகள்

2-வது டெஸ்ட்: காயத்தால் இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் விலகல்

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து முழங்கால் காயம் காரணமாக ஜாக் லீச் விலகினார்.

யோகேஷ் குமார்

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து முழங்கால் காயம் காரணமாக ஜாக் லீச் விலகினார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்டிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல் டெஸ்டின் நடுவில் காயம் ஏற்பட்ட போதிலும், லீச் 2-வது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்நிலையில் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

லீச் குறித்து ஸ்டோக்ஸ் கூறியதாவது: “அவர் 2-வது டெஸ்டில் இருந்து விலகினார். துரதிர்ஷ்டவசமாக, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால், இது மிகவும் தீவிரமான ஒன்று அல்ல, தொடரிலிருந்து விலகும் நிலைமை ஏற்படவில்லை” என்றார்.