மயங்க் அகர்வால் @mayankcricket
தற்போதைய செய்திகள்

“நான் நலம்”: மருத்துவமனையில் இருந்து மயங்க் அகர்வால் தகவல்

உடல்நலக்குறைவு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால் தான் நலமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

யோகேஷ் குமார்

உடல்நலக்குறைவு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால், தான் நலமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகர்தலாவில் இருந்து தில்லி வழியாகச் சூரத்திற்குப் பயணம் செய்தபோது மயங்க் அகர்வாலுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அகர்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வரும் வெள்ளியன்று தொடங்கும் ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அகர்வால் விளையாட மாட்டார் எனத் கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களைப் பகிர்ந்து, நான் நலம் எனக் கூறியுள்ளார் மயங்க் அகர்வால்..

தன்னுடைய உடல்நலம் குறித்து மயங்க் அகர்வால் கூறியதாவது: “நான் நலம். மீண்டும் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறேன். உங்களின் அன்புக்கும், வேண்டுதலுக்கும் நன்றி” என்றார்.