புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  ANI
தற்போதைய செய்திகள்

சிறுமி கொலை வழக்கு: காவலர்களை மாற்ற முதல்வர் உத்தரவு

சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

யோகேஷ் குமார்

சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டிய காவலர்களை மாற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். புகார் அளித்தும், காவலர்கள் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிறகு, காணாமல்போன சிறுமி முத்தியால்பேட்டையில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முத்தியால்பேட்டை காவலர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதன் பிறகு முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.