'கோடியில் இருவர்'  @Parithabangal_
தற்போதைய செய்திகள்

'கோடியில் இருவர்' ஓடிடியில் வெளியிடாததற்குக் காரணம் என்ன?: பதிலளித்த பரிதாபங்கள் கோபி, சுதாகர்

எங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான முயற்சியில் களமிறங்கி உள்ளோம்.

யோகேஷ் குமார்

யூடியூப் மூலம் பிரபலம் அடைந்த பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிப்பில் 'கோடியில் இருவர்' வலைத்தொடரின் (Web Series) முதல் பகுதி இன்று வெளியாகிறது. 'கோடியில் இருவர்' டீஸர் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து இத்தொடர் ஓடிடியில் வெளியிடாததற்கான காரணத்தைக் கோபி கூறினார்.

இது குறித்து பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் பேசியதாவது: “எங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான முயற்சியில் களமிறங்கி உள்ளோம். கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் பெங்களூர் சென்று அங்கு ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்க முயற்சி செய்யும் கதை தான் 'கோடியில் இருவர்' . இத்தொடர் பல ஓடிடி நிறுவனங்களின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதால் தான் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவில்லை” என்றனர்.