வரலாறு காணாத அளவில் ஒரு சவரன் தங்கம் ரூ. 87,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப நாள்களாகவே தங்கத்தின் விலை கடுமையான உயர்வைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
கடந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85,120 ஆக இருந்த நிலையில், திங்கள்கிழமை ரூ. 86,160-க்கும், செவ்வாய்க்கிழமை ரூ. 86,880 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 240 உயர்ந்து வரலாறு காணாத அளவில் ரூ. 87,120-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ. 30 உயர்ந்து, ரூ. 10,890-க்கு விற்பனையாகிறது.
இதன்மூலம் கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2000 உயர்ந்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தொடர் விலை ஏற்றம் காணப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி, ஒரு கிராம் ரூ. 161-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,61,000-க்கும் விற்பனை ஆகிறது.