ANI
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு கிராம் ரூ. 12 ஆயிரத்துக்கு விற்பனை | Gold Rates |

காலையில் அதிரடியாக ரூ. 2000 குறைந்த நிலையில் மாலை ரூ. 400 உயர்வு...

கிழக்கு நியூஸ்

தங்கம் விலை இன்று காலை அதிரடியாக ரூ. 2,000 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ. 400 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச பொருளாதாரத்தில் மாற்றம், தங்கத்தின் மீதான திடீர் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக நேற்று (அக்.17) அதிரடியாக ரூ. 2,400 உயர்ந்தது. கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 12,200-க்கும், சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனையானது. இதனால் விரைவில் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டது.

இன்று தங்கம் விலை எதிர்பாராத சரிவைக் கண்டது. அதன்படி இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 250 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,950-க்கும், சவரனுக்கு ரூ. 2,000 குறைத்து, ஒரு சவரன் ரூ. 95,600-க்கும் விற்பனையானது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் மாலையில் தங்கம் மீண்டும் விலையேற்றத்தைக் கண்டது. மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ. 50 உயர்ந்த தங்கம் ரூ. 12,000-க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 96,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடந்த சில நாள்களுக்கு கிராமுக்கு ரூ. 13 குறைந்து ரூ. 190-க்கும் கிலோவுக்கு ரூ. 13,000 குறைந்து ரூ. 1.90 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.