ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை 
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் ரூ. 2,560 உயர்ந்த தங்கம் விலை! | Gold Rate |

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி...

கிழக்கு நியூஸ்

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ. 2,560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 98,960-க்கு விற்பனை ஆகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும் தாழ்ந்தும் வருகிறது. குறிப்பாக இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது. குறிப்பாக வெள்ளியின் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. கடந்த 10 அன்று வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது.

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ. 20-ம், சவரனுக்கு ரூ. 160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050-க்கும், ஒரு சவரன் ரூ.96,499-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ. 200-ம். சவரனுக்கு ரூ. 1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மாலை நிலவரப்படி தங்கம் மேலும் ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 98,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ. 1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 216-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து கிலோ ரூ. 2.16 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold prices rose by Rs. 2,560 in a single day today