ரோஜர் ஃபெடரர்
ரோஜர் ஃபெடரர் ANI
தற்போதைய செய்திகள்

உருவாகும் ரோஜர் ஃபெடரரின் ஆவணப்படம்

யோகேஷ் குமார்

ஆஸ்கார் விருது பெற்ற ஆசிஃப் கபாடியா டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் குறித்த ஆவணப்படத்தை இயக்குகிறார்.

டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் 2022-ல் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் டென்னிஸ் விளையாடிய கடைசி 12 நாள்களை ஆவணப்படமாக இயக்க முடிவு செய்துள்ளார் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆசிஃப் கபாடியா. இந்த ஆவணப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றார். 2016-ல் ‘ஏமி’ ஆவணப்படத்தை இயக்கியதற்காக ஆஸ்கார் விருது பெற்றார் ஆசிஃப் கபாடியா. இவர் இயக்கும் ஆவணப்படம் குறித்து ரோஜர் ஃபெடரர் பேசியதாவது:

"ஆரம்பத்தில், எனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி தருணங்களைப் படம்பிடிப்பதே யோசனையாக இருந்தது. அதன் மூலம் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதனை காட்ட முடியும். டென்னிஸ் விளையாடும் போது முக்கியமான தருணங்களில் கேமராக்கள் இருப்பதால் நான் வெட்கப்படுவேன். இருப்பினும், பல முக்கியமானத் தருணங்கள் படம்பிடிக்கப்பட்டு அது ஒரு ஆழமான பயணமாக மாறியது. பிரைமுடன் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். டென்னிஸில் எனது இறுதி பயணம் டென்னிஸ் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சென்றடையும் என நம்புகிறேன்” என்றார்.