ஃபாஸ்டேக் 
தற்போதைய செய்திகள்

ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்: ஜன. 31 கடைசித் தேதி

பிப்.1 முதல் அப்டேட் செய்யப்படாத ஃபாஸ்ட்டேக் எண் செயலிழக்கம் செய்யப்படும்.

யோகேஷ் குமார்

இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களின் ஃபாஸ்ட்டேக் எண்ணை உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜன.31-க்குள் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும் என்றும், அப்டேட் செய்யப்படாத ஃஃபாஸ்ட்டேக் எண்கள் செயலிழக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 96 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் ஃபாஸ்ட்டேக் எண் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அட்டைகளை வைத்திருக்கும் சிலர் கேஒய்சி செய்யாமல் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அனைவரும் தங்களின் ஃபாஸ்ட்டேக் எண்ணை உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அப்டேட்டை செய்ய நாளை (ஜன.31) கடைசி நாள் ஆகும். பிப்.1 முதல் அப்டேட் செய்யப்படாத ஃபாஸ்ட்டேக் எண்கள் செயலிழக்கம் செய்யப்படும்.

எனவே இவ்வாறு செய்வதால் ஒரே ஃபாஸ்ட்டேக் எண்ணை பலரும் பல வாகனங்களுக்குப் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஒய்சி அப்டேட் செய்வது எப்படி?

1) ஃபாஸ்ட்டேக் இணையதளத்திற்குள் செல்ல வெண்டும்

https://fastag.ihmcl.com/

2) நீங்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண் மூலம் லாகின் செய்யவும்

3) அதில் கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பதிவு செய்து அதை வைத்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.