ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் படம்: @https://twitter.com/uthayan10675869
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

யோகேஷ் குமார்

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று விவசாயிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச் சட்டம் இயற்ற வேண்டும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய விவசாய சங்கங்கள் தில்லியை நோக்கி பிப். 13 முதல் பேரணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பேரணியைத் தடுக்கும் விதமாக கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசி, விவசாயிகளைக் கலைத்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக பஞ்சாபில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபடுவார்கள் என விவசாய சங்கங்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று விவசாயிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மேலும் அவர்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.