ஓ. பன்னீர்செல்வம் @OfficeOfOPS
தற்போதைய செய்திகள்

திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி: ஓ. பன்னீர்செல்வம்

சுயநலத்திற்காக திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார்.

யோகேஷ் குமார்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓ. பன்னீர்செல்வம், “எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016 ஆம் ஆண்டு முழங்கியவர் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா. இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது X தளத்தில் கூறினார்.