அதிதி ஷங்கர் @aditishankarofficial
தற்போதைய செய்திகள்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம்: புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

யோகேஷ் குமார்

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்துக்கும் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் கடந்த 2021-ல் மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ரோஹித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை அதிதி ஷங்கர் தனது அக்கா மற்றும் மாமாவின் நிச்சயதார்த்தம் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, “உலகில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு நபர்களுடன்” என கூறினார்.