விவசாயிகள் பேரணி
விவசாயிகள் பேரணி ANI
தற்போதைய செய்திகள்

விவசாயிகள் பேரணி: 2-வது நாளாக கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

யோகேஷ் குமார்

டிரோன்களைப் பயன்படுத்தி தொடர்ந்து 2-வது நாளாக விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டுள்ளது.

'தில்லி சலோ' என்கிற தலைப்பில் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டனர். இதனால் தில்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 2020-ல் இதே போன்ற ஒரு போராட்டம் ஒரு வருட காலமாக நடந்தது. விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்தப் பேரணியும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தில்லி முழுவதும் மார்ச் 12 வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த பேரணியைத் தடுக்கும் விதமாக கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசி, விவசாயிகளைக் கலைத்து வந்தனர். இந்நிலையில் டிரோன்களைப் பயன்படுத்தி தொடர்ந்து 2-வது நாளாக விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டுள்ளது.