நயன்தாரா @NayantharaU
தற்போதைய செய்திகள்

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா: நயன்தாராவுக்கு விருது

சிறந்த நடிகருக்கான விருது ‘ஜவான்’ படத்துக்காக ஷாருக்கானுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது.

யோகேஷ் குமார்

தாதா சாகேப் பால்கே விருது என்பது திரைத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்நிலையில் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 மும்பையில் நேற்று (பிப்.20) நடைபெற்றது.

இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘ஜவான்’ படத்துக்காக ஷாருக்கானுக்கும் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. ‘ஜவான்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். மொத்தத்தில் ‘ஜவான்’ படத்தில் பணியாற்றிய மூன்று நபர்கள் விருதுகளை வென்றனர். கடந்த ஆண்டு இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ’ஜவான்’ படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது.

மேலும் சிறந்த இயக்குநராக ‘அனிமல்’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்படத்தில் வில்லனாகக் கலக்கிய பாபி தியோல் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதைப் பெற்றார்.