ANI
தற்போதைய செய்திகள்

உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா

சினி ஷெட்டி இப்போட்டியில் முதல் 4 இடங்களுக்குள் தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்.

யோகேஷ் குமார்

71-வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டம் வென்றுள்ளார்.

உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று மும்பையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, பட்டம் வென்றார். அவருக்கு 2021-ல் உலக அழகியாகத் தேர்வான கரோலினா மகுடம் சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா உட்பட 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் கலந்து கொண்ட நிலையில், இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சினி ஷெட்டி உள்பட 14 அழகிகள் தேர்வு பெற்றனர்.

சினி ஷெட்டி இப்போட்டியில் முதல் 4 இடங்களுக்குள் தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்.