பிரதமர் மோடி ANI
தற்போதைய செய்திகள்

நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா: பிரதமர் மோடி அறிவிப்பு

பாரத ரத்னா விருது கடந்த இரு வாரங்களில் மட்டும் ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...

யோகேஷ் குமார்

முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த இரு வாரங்களில் மட்டும் ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி ஆகியோருக்கு எற்கெனவே பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூவருக்கு இந்த விருதைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான சரண் சிங் 1902-ல் பிறந்தவர். இவர் 1979 முதல் 1980 வரை இந்தியாவின் 5-வது பிரதமராக பணியாற்றினார்.

1921-ல் பிறந்த நரசிம்ம ராவ் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் 9-வது பிரதமராக பணியாற்றி, பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமை அவருக்கு உண்டு.

எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். 1925-ல் பிறந்த இவர், கடந்த ஆண்டு காலமானார். வேளாண் ஆராய்ச்சிகளுக்காக விருது பெற்ற எம்.எஸ். சுவாமிநாதன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றார்.