சிவகார்த்திகேயன் @Siva_Kartikeyan
தற்போதைய செய்திகள்

அயலான் - 2 கண்டிப்பாக வெளியாகும்: சிவகார்த்திகேயன்

யோகேஷ் குமார்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

கடந்த ஜன.12 அன்று வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகளவில் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அயலான் - 2 கண்டிப்பாக வெளியாகும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சமீபத்தில் அயலான் படம் உருவான விதத்தின் காணொளி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் சிவகார்த்திகேயன் பேசியாதாவது:

“அயலான் - 2 கண்டிப்பாக நடக்கும். இதை நாங்கள் கடமைக்காக சொல்லவில்லை. படம் குறித்த சிந்தனை ஒன்று இருக்கிறது. இது குறித்து ஆராய்வோம். அயலான் நல்ல வரவேற்பை பெற்றதால் அதில் இருந்த சிறு தவறுகளைத் திருத்திகொண்டு, அதனை இரண்டாம் பாகத்தில் சரிசெய்வோம்” என்றார்.