அஸ்வின்
அஸ்வின் ANI
தற்போதைய செய்திகள்

அஸ்வினின் 507 விக்கெட்டுகளின் காணொளிகளையும் தொகுத்த தீவிர ரசிகர்!

யோகேஷ் குமார்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் 100-வது டெஸ்டாகும்.

இதன் மூலம் இந்த சாதனையைப் படைக்கும் 14-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார் அஸ்வின். சமீபத்தில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார் அஸ்வின்.

இந்நிலையில் அஸ்வினின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் இதுவரை டெஸ்டில் வீழ்த்திய 507 விக்கெட்டுகளின் காணொளிகளையும் தொகுத்துள்ளார். அந்த ரசிகரின் உழைப்புக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

2011-ல் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் விளையாடிய அஸ்வின் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த 4-வது டெஸ்டில் விளையாடினார். அன்று முதல் இன்று வரை 99 டெஸ்டுகளில் விளையாடி, அவர் வீழ்த்திய 507 விக்கெட்டுகளின் காணொளிகளையும் அந்த ரசிகர் தொகுத்துள்ளார்.

50 நிமிடங்கள் கொண்ட அந்த காணொளிக்கு காப்புரிமை பிரச்னை இருந்தாலும், அனைவரது கவனத்தையும் பெற்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.