அம்பானி வீட்டு திருமணம் @AkashMAmbani
தற்போதைய செய்திகள்

அம்பானி வீட்டு திருமணம்: பிரபலங்கள் பங்கேற்பு

உலகளவில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

யோகேஷ் குமார்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணக் கொண்டாட்டத்தில் உலகளவில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜனவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து குஜராத் ஜாம்நகரில் மார்ச் 1 அன்று திருமணத்துக்கு முந்தைய விழா தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக நடந்துவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்விழா இன்று நிறைவடைகிறது.

இவ்விழாவில் பில்கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், ரியானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான், சச்சின், எம்.எஸ். தோனி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சானியா நேவால், அட்லி, ராம் சரண், பிராவோ, சைஃப் அலிகான், கரீனா கபூர், பொல்லார்ட், ஜக்கி வாசுதேவ் போன்ற பலரும் பங்கேற்றனர்.