அம்பத்தி ராயுடு, ஜெகன் மோகன் ரெட்டி @RayuduAmbati
தற்போதைய செய்திகள்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் அம்பத்தி ராயுடு

கடந்த ஐபிஎல் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு அரசியலில் களமிறங்கபோவதாக அறிவித்திருந்தார்.

யோகேஷ் குமார்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பத்தி ராயுடு சமீபத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு அரசியலில் களமிறங்கபோவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து டிச.28 அன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அம்பத்தி ராயுடு, தான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், மேலும் அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் தன்னுடைய X தளத்தில் கூறியுள்ளார்.