அஜித்தின் 63-வது படம் ‘குட் பேட் அக்லி’  @SureshChandraa
தற்போதைய செய்திகள்

அஜித்தின் 63-வது படம் ‘குட் பேட் அக்லி’

யோகேஷ் குமார்

அஜித்தின் 63-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஜித், மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அஜித்தின் 63-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.