சினேகன் @KavingarSnekan
தற்போதைய செய்திகள்

சினேகம் அறக்கட்டளை வழக்கு: நடிகை ஜெயலட்சுமி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

யோகேஷ் குமார்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஜெயலட்சுமி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022-ல் 'சினேகம் பவுண்டேஷன்' பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகப் பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து “இது நீதித்துறைக்குக் கிடைத்த வெற்றி” என சினேகன் பேட்டி அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து இருவரும் சமாதானமாகப் பேசுவோம் என அழைத்தும் நடிகை ஜெயலட்சுமி அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் நான் நீதிமன்றத்திற்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. நீதிமன்றம் எது உண்மை என்பதை விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்று சினேகன் பேட்டியளித்துள்ளார்.