படம்: சன்சத்
தற்போதைய செய்திகள்

மேலும் 49 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்

சுவாமிநாதன்

ஃபரூக் அப்துல்லா, சுப்ரியா சுலே, சசி தரூர் உள்பட மேலும் 49 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

திங்கள்கிழமை 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள்.

டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதை அரசியலாக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் டிசம்பர் 13 முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வந்தார்கள். செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்மூலம், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி நிறைவடைகிறது.