படகுச் சவாரி
படகுச் சவாரி ANI
தற்போதைய செய்திகள்

படகுச் சவாரி: 12 மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு

யோகேஷ் குமார்

வதோதராவில் உள்ள ஒரு ஏரியில் படகுச் சவாரி செய்த போது எதிர்பாராத விதமாக 12 மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் வதோதரா பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்குப் பள்ளி மாணவர்கள் சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குப் படகுச் சவாரி செய்யும் போது திடீரென படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத வகையில் 12 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படகிலிருந்து 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வதோதரா முனிசிபல் கார்ப்பரேசன் நிலைக்குழுவின் தலைவர் டாக்டர் ஷீத்தல் மிஸ்திரி கூறியதாவது, “14 இருக்கைகள் மட்டுமே கொண்ட படகில் 35 பேர் அமர்ந்ததால் படகு சமநிலையை இழந்து கவிழ்ந்திருக்கலாம்” என்றார்.

இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.