பி. சுசீலா 
சினிமா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாடகி பி. சுசீலா!

இந்திய சினிமாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

யோகேஷ் குமார்

சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகி சுசீலா சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

1950- களில் தொடங்கி இந்திய சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 17,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி. சுசீலா.

88 வயதான அவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

நலமுடன் வீடு திரும்பிய அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.