தேசிய விருதுகள்: ஏமாற்றமடைந்த தமிழ்ப் படங்கள்! 
சினிமா

தேசிய விருதுகள்: ஏமாற்றமடைந்த தமிழ்ப் படங்கள்!

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் வசூலில் சாதனை நிகழ்த்தினாலும் தேசிய விருதில் அதற்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.

கிழக்கு நியூஸ்

2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்துக்கு 2 விருதுகளும் எனத் தமிழ்த் திரையுலகுக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன.

எனினும் அனைவரும் எதிர்பார்த்த சில தமிழ்ப் படங்களுக்கு எந்தவொரு தேசிய விருதும் கிடைக்காதது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கார்கி படத்துக்காக சாய் பல்லவிக்கு நிச்சயம் சிறந்த நடிகைக்காக தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விருதை திருச்சிற்றம்பலம் படத்துக்காக நித்யா மேனன் தட்டிச் சென்றுவிட்டார். கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் வசூலில் சாதனை நிகழ்த்தினாலும் தேசிய விருதில் அதற்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.

டாணாக்காரன், மாமனிதன் படங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டாலும் அந்தப் படங்களுக்கும் தேசிய விருதில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. பா. இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, ஆர். பார்த்திபனின் இரவின் நிழல், சேத்துமான், குதிரைவால் என விமர்சன ரீதியாகப் பாராட்டப் படங்களுக்கும் ஒரு தேசிய விருதும் கிடைக்கவில்லை.