‘பிளாக்’ @Potential Studios LLP
சினிமா

ப்ரியா பவானி ஷங்கரின் புதிய படம் அறிவிப்பு!

இது கிரைம் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யோகேஷ் குமார்

ஜீவா - ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படம் செப்டம்பரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம், மான்ஸ்டர், இறுகப்பற்று போன்ற படங்களைத் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள படம் ‘பிளாக்’.

இப்படத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இசை - சாம் சி.எஸ்.

இது கிரைம் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.