சினிமா

ஒரே படத்தில் ரஜினி, கமல், அர்ஜூன்: 16 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்த ஷங்கர்!

யோகேஷ் குமார்

இந்தியன், சிவாஜி, முதல்வன் ஆகிய படங்களின் கதாபாத்திரங்களை இணைத்து ஒரே கதையில் கொண்டு வரவேண்டும் என்ற யோசனை தனக்கு இருந்ததாக ஷங்கர் கூறியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது.

இப்படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

இந்நிலையில் படக்குழுவினர் படம் தொடர்பாக நேர்காணல் அளித்து வருகின்றனர். அதில் இயக்குநர் ஷங்கரிடம், ஷங்கர் சினிமேடிக் யுனிவர்ஸ் குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஷங்கர்,

2008-ல் இந்தியன்(ஹிந்துஸ்தானி), சிவாஜி, முதல்வன் (ஒருநாள் முதல்வர்) ஆகிய படங்களின் கதாபாத்திரத்தை இணைத்து ஒரே கதையில் கொண்டு வரவேண்டும் என்ற யோசனை எனக்கு தோன்றியது. ஆனால், எனது உதவி இயக்குநர்கள் அந்த யோசனை நன்றாக இல்லை என்றனர். அதனால் அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன். பொதுவாக எதேனும் யோசனை தோன்றினால் எனக்கு நெருக்கமானவர்களிடம் அதை சொல்லுவேன், யாரும் பாராட்டவில்ல என்றால் அந்த யோசனையை விட்டுவிடுவேன்.