சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த விக்ராந்த் @SriLakshmiMovie
சினிமா

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த விக்ராந்த்

பாண்டிய நாடு, கெத்து, லால் சலாம், கவண் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் விக்ராந்த்.

யோகேஷ் குமார்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் விக்ராந்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அயலான் படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன் உட்பட பலரும் நடிக்கின்றனர். இசை- அனிருத்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2005-ல் கற்க கசடற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான விக்ராந்த் பாண்டிய நாடு, கெத்து, லால் சலாம், கவண் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.