விஜய் நடிக்கும் 69-வது படத்துக்கு ஜன நாயகன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இசை - அனிருத். அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியுள்ள விஜய், இந்தப் படத்துக்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகி விடுவேன் என அறிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ஜன நாயகன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பார்வையில் ரசிகர்களுடன் இணைந்து விஜய் செல்ஃபி எடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியாகும் படக் குழு அறிவித்தது. இதன்படி, மாலை 4 மணிக்கு விஜயின் ஜன நாயகன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. இதில் விஜய் சாட்டையை சுழற்றியபடி நிற்க, நான் ஆணையிட்டால் என போஸ்டரில் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் போஸ்டரை காட்டிலும் இரண்டாவது போஸ்டர் ரசிகர்களிடத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.