விஜய் ஆண்டனி 
சினிமா

இரண்டு நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை: விஜய் மில்டனுக்கு விஜய் ஆண்டனி பதில்!

"இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படுகிறது".

யோகேஷ் குமார்

மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் இயக்குநருக்கே தெரியாமல் சேர்க்கப்பட்ட காட்சியை தான் இனணக்கவில்லை என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத் குமார் உட்பட பலர் நடித்த மழை பிடிக்காத மனிதன் படம் ஆகஸ்ட் 2 அன்று வெளியானது.

இப்படத்தின் ஆரம்பத்தில் தனக்கு தெரியாமல் ஒரு நிமிடத்திற்கு காட்சிகள் சேர்க்கப்பட்டதாக இயக்குநர் விஜய் மில்டன் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் ஆண்டனி, “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இதனைத் தெளிவுப்படுத்திய விஜய் ஆண்டனிக்கு நன்றி தெரிவித்த விஜய் மில்டன், “தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்னை சரத் குமாரின் தலையீட்டால் தீர்க்கப்பட்டு இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார்.