அக்டோபரில் வெளியாகும் ரஜினியின் ‘வேட்டையன்’ @LycaProductions
சினிமா

அக்டோபரில் வெளியாகும் ரஜினியின் ‘வேட்டையன்’

இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

யோகேஷ் குமார்

ரஜினியின் ‘வேட்டையன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.

இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - அனிருத்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 12 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் ‘வேட்டையன்’ படம் விடுமுறை நாள்களை ஒட்டி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.